இந்தியாவில் 80 சதவிகித பெண்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை

வியாழன், 17 டிசம்பர் 2015 (10:59 IST)
இந்தியாவில் 80 சதவிகித பெண்களுக்கு வங்கிக் கணக்குகள் இல்லை என்று ஐக்கிய நாடுகள் அவையின் வளர்ச்சித் திட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
 

 
ஐக்கிய நாடுகள் அவையின், வளர்ச்சி திட்ட ஆணையம், மனிதவள மேம்பாட்டு குறியீடு தரவரிசை குறித்த அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் உலக அளவில் வாழ்க்கைத் தரம், சராசரி ஆயுட்காலம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பட்டியல் இட்டுள்ளது.
 
அந்த அறிக்கையில் உலக அளவில் பல்வேறு நாடுகளில் நிலவி வரும் பாலின சமத்துவம் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன. அதில், “கூலியில்லா உழைப்பால் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் சுரண்டப்படுவதாகவும், 39 சதவிகிதப் பெண்களின் உழைப்பிற்கு வருமானம் கிடைப்பதில்லை” என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
மேலும், இந்தியா, பாகிஸ்தான், மெக்ஸிகோ, உகாண்டா உள்ளிட்ட 38 நாடுகளில் 80 சதவிகித பெண்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை. ஆனால் ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் 90 சதவிகிதத்திற்கு அதிகமான பெண்கள் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர் என்றும் கூறப்பட்டு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்