என் மகள் தற்கொலை வழக்கில் வீடியோ ஆதாரத்தை வெளியிடுவேன் : ஜியா கான் தாய் பரபரப்பு தகவல்

திங்கள், 14 டிசம்பர் 2015 (15:38 IST)
தன் மகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, முக்கிய வீடியோ ஆதாரத்தை வெளியிடுவேன் என்று மும்பை நடிகை ஜியான்கானின் தாய் ராபியாகான் தெரிவித்துள்ளார்.


 

 
பாலிவுட் நடிகை ஜியாகான் 2013 ஆம் ஆண்டு, ஜீன் மாதம் அவர் வசித்து வந்த அடுக்கு மாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வழக்கை விசாரித்த சிபிஐ ஜியாகான் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று சமீபத்தில் அறிக்கை அளித்தனர்.
 
அதன் பின், ஜியாகான், அவரது காதலன் சூரஜ் உடனான உறவில், நான்கு மாதம் கர்ப்பமாக இருந்தார் என்பதும், அந்த கருவை கலைக்க அவரும் காதலரும் முயற்சி செய்துள்ளார்கள் என்பதையும் சிபிஐ கண்டுபிடித்தனர்.
 
விசாரணையில், ஜியாகான் கர்ப்பத்தை கலைக்க மருத்துவர் கொடுத்த மாத்திரையால், அவரின் கர்ப்பம் கலைந்து அவருக்கு கடுமையான வலியோடு கூடிய உதிரப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனே அவர் தனது காதலர் சூரஜை உதவிக்கு அழைத்துள்ளார். சூரஜும் அங்கு வந்துள்ளார். ஜியாகானுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. 
 
ஆனால், ஜியாகானை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால், எங்கே இந்த விவகாரம் எல்லோருக்கும் தெரிந்து விடும் என்று கருதி, அவரே அந்த அந்த கருவை தனது கையால் வெளியே எடுத்து கழிவுநீர் தொட்டியில் எறிந்துள்ளார்.இது ஜியாகான் மனதை பெரிதும் பாதித்துள்ளது. அதனாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டார் என சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.  
 
இந்நிலையில், சிபிஐ-யின் செயல்பாடுகளில் தனக்கு திருப்தி இல்லை என்று கருத்து தெரிவித்துள்ள ஜியாகானின் தாய் ராபியாகான்,  ஜியாகான் தற்கொலை செய்து கொண்ட அன்று எடுக்கப்பட்ட ஒரு முக்கிய வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், இனிமேல்தான் பல முக்கிய உண்மைகள் வெளிவர உள்ளதாகவும் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார்.
 
தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஜியாகானுக்கும் அவரது காதலர் சூரஜிற்கும் இடையே தொலைபேசியில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் சூரஞ் ஜியாகானை திட்டி பல எஸ்.எம்.எஸ் களை அனுப்பியிருக்கிறார் என்று சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்