ஐ.ஐ.டி.மாணவர் அமைப்பின் அங்கீகாரம் ரத்து: அமைச்சர் ஸ்மிருதி இரானி வீட்டு முன்பு மாணவர்கள் போராட்டம்

சனி, 30 மே 2015 (00:25 IST)
டெல்லியில் உள்ள மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இல்லத்தின் முன்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


 

பிரதமர் நரேந்திர மோடியை கடும் விமர்ச்சனம் செய்த காரணத்தினால், சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் அமைப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 
 
இந்த அங்கீகார ரத்து நடவடிக்கையை, மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எடுத்துள்ளார் என தகவல் வெளியானது.
 
இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பைச்சேர்ந்த மாணவர்கள்,  டெல்லியில் உள்ள மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இல்லத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது , அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன் மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியையும் கண்டித்தும் கோஷமிட்டனர். 
 
மேலும், சென்னை ஐஐடி மாணவர்கள் அமைப்புக்கு மீண்டும் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று  போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். 
 
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலர், காவல்துறையின் தடுப்பை கடந்து செல்ல முயன்ற போது அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
மாணவர்கள் சங்க அங்கீகராம் ரத்து விவகாரம் இந்தியா முழுமைக்கும் வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிடும் அபாயம் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்