”ராகுல் காந்தியை எனது கிளார்க்காக கூட வேலைக்கு சேர்க்க மாட்டேன்” - ராம்ஜெத்மலானி

செவ்வாய், 17 மார்ச் 2015 (16:01 IST)
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை எனது கிளார்க்காக கூட வேலைக்கு எடுக்க மாட்டேன் என்று மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.
 
பிரபல மூத்த வழக்கறிஞரும், பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் ஜாமீன் மனு மீதான விசாரணைக்கு, ஜெயலலிதா தரப்பில் வாதாடுவதற்காக ஆஜரானவருமான ராம்ஜெத்மலானி டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
 
அப்போது ராகுல் காந்தியை ’உளவு பார்ப்பது’ குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய ராம்ஜெத்மலானி, ”ராகுல் காந்தியை எனது கிளார்க்காக கூட வேலைக்கு அமர்த்த மாட்டேன்.
 
அவருடைய கிளார்க் ஒரு நேர்மையான அமைச்சரை விட அதிகம் சம்பளம் வாங்குகிறார் என்று கூறியது குறித்து தெளிவுபடுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும், நரேந்திர மோடி அரசு கருப்புப் பணம் குறித்து எடுத்து நடவடிக்கைகள் பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்