நீங்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்க இறைவனிடம் பிராத்திக்கிறேன்: பிரதமர் மோடி

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (12:20 IST)
டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் எலும்பியல் நோயால் அவதிப்பட்டுவருகிறார். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக அவர் வெளிநாடு சென்றுள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் வலைதளத்தில் கூறியுள்ளதாவது:
"அன்பான அஜய் மக்கான் ஜி நீங்கள் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என இறைவனிடம் பிராத்திக்கிறேன்."

இதற்கு முன்னதாக அஜய் மக்கான் தனது டிவிட்டர் பக்கத்தில் தான் எலும்பியல் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்