நான் ராஜீவ் காந்தியின் மகள் - மோடியின் பேச்சிற்கு பிரியங்கா காந்தி பதில்

வியாழன், 1 மே 2014 (18:35 IST)
நான் ராஜீவ் காந்தியின் மகள் என்று பிரியங்கா காந்தி நரேந்திர மோடியின் பேச்சிற்கு பதில் அளித்துள்ளார். 
 
பாஜக வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தொலைகாட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில்,  பிரியங்கா காந்தி எனது மகள் போன்றவர் என்று எனது கூறி இருந்தார். 
 
இது குறித்து கருத்து தெரிவித்த பொருளாதார அமைச்சர் சிதம்பரம், மோடி பிரியங்காவை அவரது மகளை போன்றவர் என கூறுவது மகிழ்ச்சிதான், ஆனால், பிரியங்கா மோடி போன்ற ஒருவரை தனது தந்தை இடத்தில் பார்க்கமுடியாமென தெரியவில்லை என பேசியிருந்தார்.
 
இதற்கிடையே இதற்கு பதிலளிக்கும்விதமாக பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி 'நான் ராஜீவ் காந்தியின் மகள்' என்று பேசியுள்ளார். 
 
பிரியங்கா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் அவர் தாய் மற்றும் சகோதரருக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இவர் பாஜக வின் பிரதமர்வேட்பாளர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்