இந்நிலையில் ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கெஜ்ரிவாலிடம் ஆளுநர் அனில் பாய்ஜால் தெரிவித்தார். இதனையடுத்து அவையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை கல்வி மேம்பாட்டிற்காக செய்வதாகவும், சேவைக்காக அல்ல எனவும் ஆம் ஆத்மியினரும் அரவிந்த கெஜ்ரிவாலும் கூறினர்.
அப்போது அவையில் பேசிய கெஜ்ரிவால், ஆளுநருக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், பயங்கரவாதி அல்ல. சிசோடியாவும் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வித்துறை அமைச்சர், பயங்கரவாதி அல்ல. நாங்கள் டெல்லியின் மக்கள் பிரதிநிதிகள். இவர்கள் சொல்வதை மட்டும் கேட்டு நடக்க நாங்கள் அதிகாரிகள் அல்ல என ஆவேசமாக பேசினார்.