கலப்பு திருமண ஜோடிக்கு அறை கொடுக்க மறுத்த விடுதி - பெங்களூரில் பரபரப்பு

புதன், 5 ஜூலை 2017 (18:55 IST)
கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு விடுதியில் தங்க அறை கொடுக்க மறுத்த விவகாரம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கேரளாவை சேர்ந்த சஃபீக் மற்றும் திவ்யா இருவரும் இரு வேறு மதத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இவர்கள் இருவரும் ஒரு கம்பெனிக்கு வேலை தேடி  நேர்முகக் காணலுக்காக பெங்களூர் வந்தனர்.
 
பெங்களூர் பிஎம்டிசி பேருந்து நிலையத்திற்கு அருகிலிருக்கும் சாந்திநகர் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்குவதற்கு அறை கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு அறை மறுக்கப்பட்டதாக சஃபீக் கூறியுள்ளார். 
 
ஆனால், அவர்களிடம் எந்த அடையாள அட்டையும் இல்லை. எனவேதான் அறை கொடுக்கவில்லை என விடுதி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் போலீசாருக்கு தெரிய வர, அவர்கள் அங்கே சென்று விசாரணை நடத்தினார். 
 
ஆனால், விடுதி நிர்வாகமோ அல்லது அந்த தம்பதியோ போலீசாரிடம் இதுபற்றி எந்த புகாரும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் இந்த விவகாரம், வட இந்திய ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்