ஒட்டலில் வெங்காயம் தர மறுத்ததால் உரிமையாளரை சுட்டுக் கொன்ற பீகார் இளைஞர்கள்

வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (16:42 IST)
பீகாரின் பரானி ரயில் நிலையம் அருகே உணவகத்தை ரித்திஷ் குமார் என்பவர் நடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு வந்த பீகார்  இளைஞர்கள் நான்கு பேர், பரோட்டா, ப்ரைடு ரைஸ் போன்ற உணவுகளை ஆர்டர் செய்த நிலையில், அவற்றுக்கு வெங்காயப் பச்சடி, எலுமிச்சைத் துண்டு ஆகியவற்றைக் கேட்டனர். ஆனால், லெமன், வெங்காயம் இல்லை என சப்ளையர் தெரிவித்ததால், சப்ளையர் மற்றும்  உணவக உரிமையாளருடன் நீண்ட நேரம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

அப்பொழுது  மோசமான விளைவுகளை சந்திப்பாய் என்றும், கொலை மிரட்டலும் விடுத்து சென்றுள்ளார். பின்னர்  மீண்டும் ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்த அவர்கள், திடீரென அவர்கள் வைத்த  துப்பாக்கியால் ரித்திஷை சுட்டு விட்டுத் தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் ரித்திஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த சம்பவம் ரயில்வே காவல் நிலையம் அருகே நடந்ததால் அந்தப் பகுதி மக்கள் ஆத்திரமடைந்து வன்முறையில் ஈடுபட்டனர். அப்பகுதி வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைப்பு சம்பவங்களும் நடந்ததால் அந்தப் பகுதி சில மணி நேரம்  பதற்றத்துடன் காணப்பட்டது  .குற்றவாளிகளை பிடிப்பதற்க்கு  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை உயர் அதிகாரி உறுதியளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்