அம்ரீந்தர் சிங் செய்திகளில் ஹாக்கி வீரரை டேக் செய்த ஊடகங்கள்!

வியாழன், 30 செப்டம்பர் 2021 (17:54 IST)
பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் பதவி விலகியதை அடுத்து மத்திய அமைச்சர் அமித் ஷாவை சென்று சந்தித்துள்ளார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்கள் பிறப்பித்துள்ளார். பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் அவர்களுக்கும், சித்து அவர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை அடுத்து சித்து அம்ரீந்தர் சிங் எதிர்ப்பையும் மீறி நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் கட்சியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக ஆளுநரை சந்தித்த அம்ரீந்தர் சிங் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘கட்சிக்குள் நான் மிகவும் அவமானப்படுத்தப் படுவதாக உணர்கிறேன். அவர்களுக்கு யார் மேல் நம்பிக்கை உள்ளதோ அவர்களை முதல்வராக்கட்டும்’ எனக் கூறியுள்ளார். அதையடுத்து இப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துள்ளார்.

இது சம்மந்தமாக பரபரப்பாக செய்தி வெளியிட்டு வரும் ஊடகங்கள் டிவிட்டரில் இந்த செய்தியை வெளியிடும் போது அம்ரீந்தர் சிங்கை டேக் செய்வதற்கு பதில் அதே பெயரில் உள்ள இந்திய அணியின் ஹாக்கி கோல் கீப்பரான அம்ரிந்தர் சிங்கை டேக் செய்துள்ளனர். இது சம்மந்தமாக அவர் விளக்கமளித்து என்னை டேக் செய்ய வேண்டாம் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்