மைல்கல்லை தொடர்ந்து பாஸ்போர்டிலும் இந்தி: மத்திய அரசு அறிவிப்பு

வெள்ளி, 23 ஜூன் 2017 (18:32 IST)
பாஸ்போர்ட்களில் இனி ஆங்கிலத்துடன் இந்தியும் இடம்பெறும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். 


 

 
1967ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பாஸ்போர்ட் சட்டத்தின் 50 ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு டெல்லியில் விழா நடைப்பெற்றது. இதில் கலந்துக்கொண்ட பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இனி பாஸ்போர்ட்டில் ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் இடம்பெறும் என அறிவித்தார். 
 
மேலும் 8 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோருக்கு 10 சதவீதமாக விமானக் கட்டணம் குறைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் மீண்டும் மத்திய அரசு இந்தி மொழி திணிப்பை செய்து வருகிறதா? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்