ஓராண்டுக்குப்பின் ஐ.எஸ் அமைப்பால் கடத்தப்பட்ட இந்திய பேராசிரியர்கள் மீட்பு

வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (11:11 IST)
ஆந்திராவை சேர்ந்த டி.கோபாலகிருஷ்ணா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த சி.பலராம்கிஷன் ஆகிய இருவரும் லிபியாவில் உள்ள சிர்ட்டே பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக பணியாற்றி வந்தனர். 

 
உள்நாட்டு போரால் லிபியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் பல இடங்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29–ந்தேதி, டி.கோபாலகிருஷ்ணா, சி.பலராம்கிஷன் ஆகிய இருவரையும் கடத்திச்சென்று சிறைவைத்தனர். 
 
கடத்தப்பட்ட பேராசிரியர்கள் இருவரையும் மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. இந்நிலையில், லிபியாவில் ஐ.எஸ். அமைப்பினரால் கடத்தப்பட்ட 2 இந்திய பேராசிரியர்கள் ஓராண்டுக்குப்பின் மீட்க்கப்பட்டுள்ளதாக சுஷ்மா சுவராஜ் தகவல் அளித்துள்ளார்.
 
இந்தியர்கள் மீட்கப்பட்ட தகவலை தனது ‘டுவிட்டர்’ தளத்தில்  மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வெளியிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்