பிரபல நடிகையும், மதுரா தொகுதி பாஜக எம்பியுமான ஹேமமாலினி தனது தொகுதியான மதுராவில் இருந்து தனது பென்ஸ் காரில் ஜெய்ப்பூர் சென்றார். அப்போது, டவ்சா என்ற பகுதி அருகே கார் அதிவேகமாக சென்றது. அப்போது, கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது ஏறி, எதிரே வந்த கார் மீது மோதியது.
இந்த விபத்தில், நடிகை ஹேமமாலிக்கும் படுகாயம் ஏற்பட்டது. அவருக்கு, இடது கண் மற்றும் மூக்கு அருகே பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, ஜெய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.