நோபல் பரிசு பெற்றவர் மீது இளம் பெண் பாலியல் புகார்

வியாழன், 11 பிப்ரவரி 2016 (17:01 IST)
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜேந்திர பச்சோரி மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

 
பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜேந்திர பச்சோரி கடந்த 9ஆம் தேதி டெரியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அந்த அமைப்பின் முன்னாள் ஊழியரான இளம்பெண் ஒருவர் 10 ஆண்டுகளுக்கு முன் பச்சோரி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த புகாரால் பச்சோரியிடமிருந்து பட்டம் பெற மாட்டோம் என்று டெரி பல்கலைகழக மாணவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
இதற்கு முன்பாக, பருவநிலை மாறுதல் தொடர்பாக ஆராய்ச்சி செய்து வரும் மாணவி ஒருவர், பச்சோரி தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்தார் என்று 2013ம் ஆண்டு புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
 
இந்த சர்ச்சையினால் சர்வதேச பருவநிலை மாற்ற குழுவின் தலைவர் பதவியில் இருந்து அவர் நேற்று ராஜினாமா செய்துள்ளார்.  மேலும், அவர்  கடந்த 2007ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினை, முன்னாள் அமெரிக்க துணை அதிபர் அல் கோருடன் பகிர்ந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்