கள்ளநோட்டு புழக்கம்: முதலிடத்தில் குஜராத் மாநிலம்

செவ்வாய், 8 செப்டம்பர் 2015 (05:53 IST)
கள்ளநோட்டு புழக்கத்தில் குஜராத் மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
 

 
இந்தியாவில் பெருகி வரும் கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்காக பல்வேறு அதிரடி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

ஆனால், இந்தியாவின் இறையாண்மைக்கு வேட்டுவைக்கும் விதமாக, கள்ள நோட்டை புழக்கத்தில் விடும் சதியை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
 
இந்த நிலையில்,  இந்தியாவில் அதிக அளவில் கள்ள நோட்டு புழக்கத்தில் உள்ள மாநிலங்கள் பற்றி தகவல்களை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் திரட்டியது.
 
இதற்காக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திடம் இருந்து பெற்ற புள்ளி விவரத்தில் 5 மாநிலங்களில் கள்ள நோட்டுகள் அதிக அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில்  குஜராத் மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 
 
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அதிக அளவில் கள்ள நோட்டை புழக்கத்தில் விடுவதன் மூலம், மோடியின் புகழுக்கு களங்கம்  விளைவிப்பது மற்றும் இந்தியாவின் பொருளாதாரத்தை சீர் குலைப்பது என பாகிஸ்தானின் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க முயன்றது.
 
ஆனால், இந்த திட்டத்தை மத்திய அரசு மோப்பம் பிடித்தன் மூலம் பாகிஸ்தான் கனவு தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது. இதற்கான துரித நடவடிக்கைகள் மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளதாம். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்