நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான இதுபோன்ற வன்கொடுமை சம்பவங்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் குஜராத்தில் மூன்று வயது சிறுமியை ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பிற்கு ஆதரவாக பலர் பேசி வரும் நிலையில், மரண தண்டனைக்கு எதிராகவும் சிலர் பேசி வருகின்றனர்.