சரக்கு கடைகளை நம்பி ஆட்சி நடத்தக் கூடாது - கிரண்பேடி அதிரடி

வெள்ளி, 23 டிசம்பர் 2016 (11:29 IST)
மதுக்கடை வருமானத்தை நம்பி ஒரு அரசு செயல்படக்கூடாது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் “ தேசிய சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். ஏனெனில் மதுவின் காரணமாகவே பாலியல் துன்புறுத்தல், குழந்தைகள் வன்கொடுமை போன்ற அதிகப்படியான குற்றங்கள் நடைபெறுகின்றன.
 
மதுக்கடைகளின் மூலம் வருவாயை மட்டும் நம்பி புதுச்சேரி அரசு இருக்கக்கூடாது. மது அருந்துவோர் எண்ணிக்கை குறையும் போது குற்றங்களின் எண்ணிக்கையும் குறையும்” என்று அவர் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்