அரசு மருத்துவமனையை லீசுக்கு விட ஆந்திர அரசு ஒப்பந்தம்

வியாழன், 2 ஜூலை 2015 (10:44 IST)
ஆந்திர அரசு, சித்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையை தனியார் மருத்துவ கல்லூரிக்கு 3 ஆண்டுகளுக்கு லீசுக்கு விட ஒப்பந்தம் செய்துள்ளது.
 
ஆந்திராவில் முதல் முறையாக அரசு மருத்துவமனை ஒன்று தனியாருக்கு லீசுக்கு விடப்படுகிறது. ஒரு மருத்துவ கல்லூரி தொடங்க பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. அதில் ஒன்று விரிவான வசதியுடன் மருத்துவமனை ஒன்று இருக்க வேண்டும் என்பது ஆகும்.
 
இந்நிலையில் ஆந்திர அரசு சித்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையை தனியார் மருத்துவ கல்லூரிக்கு லீசுக்கு விட ஒப்பந்தம் செய்துள்ளது.
 
சித்தூர் மருத்துவமனையில் 300 படுக்கை வசதிகள் உள்ளன. 600 உள் மற்றும் புற நோயாளிகள் சிகிச்சை பெறமுடியும். இந்த  "கிளீனிக்கல் அப்டேஜ் மென்ட்" என்ற பெயரில் தனியார் மருத்துவமனைக்கு 3 ஆண்டு கால ஒப்பந்தத்தில் லீசுக்கு விட உள்ளது.
 
இதையடுத்து அங்கு தனியார் மருத்துவமனை மருத்துவ கல்லூரியை தொடங்க உள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட கமிட்டியை அரசு நியமித்து உள்ளது. இவர்கள் நாளைக்குள் தனது அறிக்கையை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், அரசின் இந்த முடிவுக்கு எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மணிப்பூரில் அரசு மருத்துவமனை ஒன்று தனியாருக்கு 3 ஆண்டு லீசுக்கு விடப்பட்டது என்றும், 20 ஆண்டுகள் ஆகியும் அந்த மருத்துவமனை அரசு மீட்க முடியவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்