அதிக நகைகள் வைத்திருப்பவரா நீங்கள்? மோடியின் அடுத்த ஆப்பு

வியாழன், 1 டிசம்பர் 2016 (17:02 IST)
தனி நபர் ஒருவர் அதிகபட்சமாக எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பது குறித்து மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.


 

 
வருமான வரி சட்ட திருத்த மசோதா தொடர்பாக நிதியமைச்சகம், தனி நபர் ஒருவர் அதிகபட்சமாக எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்று விளக்கம் அளித்துள்ளது. அதில், திருமணமான பெண்களிடம் அதிகபட்சமாக 500 கிராம்(62.5 பவுன்) நகையும், திருமணமாகாத பெண்களிடம் 250 கிராம்(31.25 பவுன்) தங்க நகையும் வைத்திருக்கலாம்.
 
ஆண்களை பொறுத்தவரை 100 கிராம்(12.5 பவுன்) வரை தங்கம் வைத்திருக்கலாம். இதற்கு அதிகமாக வைத்திருப்பவர், வருமான வரி கணக்கின் படி வைத்திருந்தால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதற்கான கணக்கு இல்லாத பட்சத்தில் அவர்களிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.   

வருமான வரி சட்டத்திருத்த மசோதாவில் தங்க நகைகளுக்கு எந்த புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. பழைய நடைமுறையே தொடரும். அதன்படி கணக்கில் காட்டும் நகைகளுக்கு எந்த வரியும் கிடையாது. கணக்கில் வரா நகைகளுக்கு மட்டுமே வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி பரம்பரை நகைகளுக்கு எந்த பிரச்னைகளும் இல்லை. வருமான வரித்துறை சோதனையின் போது பிடிபடும் கூடுதல் தங்கத்துக்கு 60 சதவீத வரி விதிக்கப்படும். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை 1994ம் ஆண்டு முதலே நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டத்தில் கறுப்பு பணத்தை தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு மட்டுமே பாதிப்பு உள்ளது.

இதன்மூலம் தங்க நகைகளுக்கு வரி விதிப்பு என்று சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்தது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்