கேரளாவை உலுக்கிய புகைப்படம்: விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவு

புதன், 19 ஏப்ரல் 2017 (20:29 IST)
சபரிமலை ஐப்பன் கோயிலில் இளம்பெண்கள் சிலர் தரிசனம் செய்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகி கேரளாவையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 


 

 
சபரிமலை ஐப்பன் கோயிலில் ஆண்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இளம்பெண்களுக்கு அனுமதி கிடையாது. 50வயது நிறைவடைந்த பெண்களுக்கு மட்டும் அனுமதி உண்டு. இளம்பெண்கள் அனுமதி பட வேண்டும் என்ற சர்ச்சை சில மாதங்களுக்கு முன் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இளம்பெண்கள் சிலர் ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்வது போன புகைப்படம் வெளியாகியுள்ளது. கொல்லம் பகுதியை சேர்ந்த தொலிழதிபர் ஒருவர் சபரி மலையில் விஐபி என்ற முறையில் விஷேச தரிசனம் பெற அனுமதி பெற்று அவருடன் சில பெண்களை அழைத்துச் சென்று தரிசனம் செய்ததாக புகார்கள் எழுந்துள்ளது.
 
இதுகுறித்து விசாரணை நடத்திய பின் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்வம் வாரிய அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விசாரணையை லஞ்ச ஒழிப்புதுறை காவல்துரையினர் மேற்கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்