கடந்த செப்டம்பர் 9, 2006 ஆம் ஆண்டு தனது 12 வயது மகள், தங்கை வீட்டுக்கு செல்லும் போது, அவர் கடத்தப்பட்டார் என போலீஸில் அப்பெண்ணின் தாய் புகார் அளித்தார். அந்த மகள் 10 வருடங்களுக்கு பிறகு, 22 வயது பெண்ணாக பல்வேறு நபர்களால் சித்ரவதை அனுபவித்த திரும்பி வந்துள்ளார்.
அப்பெண் கூறியதாவது, எனது சித்தி வீட்டிற்கு செல்லும் போது சிலர் என்னை மயக்கமருந்து தடவிய கைக்குட்டையால் என் முகத்தை அழுத்தியதால் மயக்கமடைந்தேன். அதன் பின் ஒரு விபச்சார கும்பலால் சிலருக்கு விற்கப்பட்டேன்.
மேற்கு வங்கம், பஞ்சாப், குஜராத், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு விற்கப்பட்டு சித்ரவதை அனுபவித்துள்ளேன். சில காமூகர்கள் என்னை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, சிகரெட்டால் சூடும் வைத்துள்ளனர்.