கணவனுக்கு வைத்த விஷ டீயை குடித்த மகள் பரிதாப பலி

செவ்வாய், 19 ஜனவரி 2016 (20:19 IST)
திரிபுரா மாநிலத்தில் கணவனை கொல்ல வைத்த விஷம் கலந்த டீயை தெரியாமல் குடித்த மகள் பரிதாபமாக இறந்த சம்பவம் நடந்துள்ளது. மகள் இறந்ததையடுத்து தாய் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இந்த சம்பவம் திரிபுரா மாநிலம் அகர்தலா அருகே உள்ள கோவிந்தா சர்தார் பரா வில் நடந்துள்ளது.
 
தாய் சீதா ராணிதெப்பர்மா வைத்த விஷ டீயை அவரது 4 வயது மகள் ஷ்ரியா தெப்பர்மா மற்றும் 12 வயது மகள் மெர்ரி தெப்பர்மா ஆகியோர் குடித்துள்ளனர். விஷ டீயை குடித்த இருவரும் மயக்கமடைந்துள்ளனர்.
 
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஷ்ரியா இறந்து விட்டார். மெர்ரி ஆபத்தான நிலையில் சிகைச்சை பெற்று வருகிறார். காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சீதா ராணியை கைது செய்துள்ளனர்.
 
29 வயதான சீதா ராணிதெப்பர்மா தனது இரண்டாவது கணவர் கவுதம் தெப்பர்மாவை கொலை செய்ய டீயில் விஷம் கலந்துள்ளார் ஆனால் அவர் அதை குடிக்கவில்லை என தெரிகிறது. இதனையடுத்து அதை அருந்திய குழந்தை ஷ்ரியா உயிரிழந்ததாக காவல் ஆணையர் உத்தம் ஃபௌமிக் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்