சமீப காலமாக ஒருதலை காதலால் பெண்கள் பலர் உயிரிழந்துவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக டெல்லியில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தில்லியில் ஆசிரியராக பணிபுரிந்த இளம் பெண் ஒருவரை வாலிபர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்தும் அந்த பெண்ணை தொடர்ந்து பின் தொல்லை கொடுத்துவந்துள்ளார் அந்த வாலிபர். இதனை அறிந்த அப்பெண்ணின் பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை அடுத்து அந்த இளைஞரை அழைத்த போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.