புதிய கட்சியை ஆரம்பித்தார் குலாம் நபி ஆசாத்: கட்சியின் பெயர் அறிவிப்பு

திங்கள், 26 செப்டம்பர் 2022 (13:16 IST)
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் குலாம்நபி ஆசாத் அவர்கள் என்று புதிய கட்சியை ஆரம்பிக்க இருப்பதாக தகவல் வெளியானது என்பதை சற்று முன் பார்த்தோம்.
 
இந்த நிலையில் குலாம் நபிஆசாத் தனது  கட்சியின் பெயரை அதிகாரபூர்வ அறிவித்துள்ளார்.
 
காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த குலாம் நபி ஆசாத் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். 
 
இதனை அடுத்து அவரது ஆதரவாளர்களும் ஏராளமானோர் கட்சியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று குலாம்நபி ஆசாத் புதிய அரசியல் கட்சி ஆரம்பித்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் அவரது கட்சியின் பெயர் Democratic Azad Party'  என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்