இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்ட முன்னாள் பேராசிரியர் கிலானி கைது

செவ்வாய், 16 பிப்ரவரி 2016 (16:13 IST)
இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்ட நிகழ்ச்சியை நடத்திய டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் கிலானி தேசவிரோத குற்றச்சாட்டின் கீழ் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
 

பாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதிகளில் ஒருவனான அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நினைவு தினத்தை டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் துக்க நாளாக கடைபிடித்தாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பியதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில்,  அப்சல் குருவிற்கு ஆதரவான நிகழ்ச்சியை நேறு பல்கலைக்கழக முன்னாள் ஆசிரியர் கிலானி ஏற்பாடு செய்து இருந்தார். அப்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி பேசியுள்ளார்.
 
இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, முன்னாள் பல்கலைக்கழக பேராசிரியர் கிலானி என்பவர் இமெயில் மூலம் மேற்படி நிகழ்ச்சியை நடத்த ஒரு அரங்கத்தை வாடகைக்கு எடுத்திருந்தார். ஆனால் முன்பதிவு செய்யப்பட்டதில் குறிப்பிட்டது போல், பொதுக்கூட்டம் நடத்தப்படவில்லை எனவும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும், மதக் கலவரத்தை தூண்டும் வகையிலும் அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியுள்ளார்.
 
இச்சம்பவம் தொடர்பாக நேற்றிரவு கிலானியை காவல்நிலையத்தில் வைத்து போலீசார் நேற்று இரவு விசாரித்து உள்ளனர். பின்னர், தேசவிரோத குற்றச்சட்டில் இன்று காலை அவரை கைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்