நாளை முதல் 10 நாட்களுக்கு லாக்டவுன்: தெலுங்கானா அரசு அதிரடி!

செவ்வாய், 11 மே 2021 (15:04 IST)
நாளை முதல் தெலுங்கான வாகனத்தில் 10 நாட்களுக்கு லாக்டவுன் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தென்னிந்தியாவில் ஏற்கனவே தமிழகம் கேரளாவில் லாக்டவுன் அமலில் இருக்கும் நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலமும் லாக்டவுன் அறிவித்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் நாளை காலை 10 மணி முதல் 10 நாட்களுக்கு தொடர்ச்சியாக லாக்டவுன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை இன்று கூடிய அமைச்சரவையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ள பத்து நாட்களில் 6 மணி முதல் 10 மணி வரை அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் மட்டும் திறந்திருக்கும் என்றும் வேறு எந்த கடைகள் திறக்க அனுமதி இல்லை என்றும் அறிவித்துள்ளது
 
தமிழகம் கேரளா போலவே தெலுங்கானா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து அம்மாநில அரசின் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியே வர வேண்டும் என்றும் அதிலும் வாகனத்தில் வெளியே வரக்கூடாது என்றும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தந்து கொரோனாவை விரட்ட ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தெலுங்கானா அரசு கேட்டுக்கொண்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்