வீடியோ அழைப்பில் பேசியபடியே தற்கொலை செய்து கொண்ட மாணவி

வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (18:05 IST)
புவனேஸ்வரில் உள்ள கனிமங்கள் மற்றும் மூலப்பொருட்கள் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சி மாணவியாக படித்து வரும் 34 வயதான மாணவி ஒருவர் தன்னுடைய நண்பர் ஒருவருடன் வீடியோ அழைப்பில் பேசியவாரே செவ்வாய் கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


 
 
தன்னுடைய ரூமில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்ட சுப்லக்ஷ்மி ஆச்சார்யாவை காவல் துறையினர் கைப்பற்றி, அவரது தற்கொலைக்கான காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர்.
 
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஒரு வாடகை ரூமில் தனியாக வசித்து வருகிறார். கடந்த செவ்வாய் கிழமை இரவு 11:30 மணியளவில் மன்சேஸ்வர் காவல் நிலையத்துக்கு ஒரு இளைஞனிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது.
 
தான் நாக்பூரில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்தி கொண்ட அந்த இளஞன், தன்னுடை தோழி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறினார். அவர் தனக்கு வீடியோ அழைப்பு செய்து, பேசிக்கொண்டு இருக்கும் போதே துணியால் கழுத்தில் சுற்றி தறகொலை செய்துகொண்டார்.
 
அந்த இளஞன் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் வீட்டு முகவரியை காவல் துறையிடம் அளித்துள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் இரண்டாவது மாடியில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்து, ஆச்சார்யாவை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
 
தற்கொலை செய்துகொண்ட மாணவியின் ஸ்மார்ட் ஃபோன் ஓர் உயர்ந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. மாணவி தற்கொலை செய்துகொண்டதை படம்பிடிக்க ஏதுவாக அது வைக்கப்பட்டிருந்ததாகவும், தாங்கள் அந்த வீடியோ ஆதாரத்தை நிபுனர்கள் மூலம் ஆராய்ந்து வருவதாக துணை காவல் கண்காணிப்பாளர் ஃபோய் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்