ஷாருக் கானுக்கு பிரான்சின் உயரிய விருது

வியாழன், 26 ஜூன் 2014 (12:46 IST)
பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக் கானுக்கு பிரான்சு அரசு அந்நாட்டின் உயரிய விருதை அளித்து கௌரவப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பிரான்சின் உயரிய விருதான "Legion d'Honneur" (Legion of Honour) என்னும் விருது, பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக் கானுக்கு வழங்கப்படவுள்ளது.
 
திரைத்துறையில்  ஷாருக் கான் அளித்த பங்கேற்பிற்காக, பிரான்சு நாட்டின் உயரிய விருதான Legion of Honour  என்னும் விருதை பிரான்சின் வெளியுறவு துறை அமைச்சர் லாரன்ட் பேபியஸ், மூன்று நாள் சுற்றுப்பயணமாக வரும் 30 ஆம் தேதி இந்தியா வரும் போது மும்பைக்கு வந்து அளிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2007 ஆம் ஆண்டு இந்த விருதை பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பெற்றார். லதா மங்கேஷ்கர் மற்றும் சத்யஜித் ரே ஆகியோர் இந்த உயரிய விருதை பெற்ற புகழ்பெற்ற இந்தியர்கள் ஆவர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்