தத்தெடுத்த 3 மகள்களையும் பலாத்காரம் செய்த விஞ்ஞானி: வேலியே பயிரை மேய்ந்த கதை
வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (09:49 IST)
நாக்பூரில் உள்ள மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் மசூத் அன்சாரி. இவருக்கு வயது 71. காவல்துறை இவரை தான் தத்தெடுத்த 3 மகள்களையும் பலாத்காரம் செய்ததாக கைது செய்துள்ளது.
மன்சூத் 2 திருமணம் செய்து கொண்டவர், ஆனாலும் இவருக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனையடுத்து மன்சூத் 3 சிறுமிகளை தத்தெடுத்து தனது கண்காணிப்பில் வளர்த்து வந்தார். ஆனால் அவர் பல ஆண்டுகளாக அந்த சிறுமிகளை பலாத்காரம் செய்து வந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சிறுமிகளை பலாத்காரம் செய்துவிட்டு, இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் அந்த மூன்று சிறுமிகளில் ஒருவர் மூலம் இந்த விஷயம் வெளியே தெரிந்துள்ளது.
தற்போது 16 வயதாகும் அந்த சிறுமி 1-ஆம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே அந்த 71 வயது காமுகனால் பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளார். தற்போது அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வறுபுறுத்தி வருவதால் நடந்த சம்பவத்தை தன்னுடன் பள்ளியில் படிக்கும் தோழி ஒருவரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இதனையடுத்து அந்த சிறுமியின் தோழி இந்த சம்பவத்தை தனது வீட்டில் சொல்ல, அவர்கள் மூலம் இந்த விவகாரம் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. பெண்கள் பாதுகாப்பு தொண்டு நிறுவனம் ஒன்று இது தொடர்பாக மசூத் அன்சாரி மீது காவல்துறையில் புகார் அளித்தது.
இதனையடுத்து காவல்துறை மசூத் அன்சாரி மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்து, மூன்று சிறுமிகளையும் மீட்டனர்.