ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சருக்கு பன்றி காய்ச்சல்

திங்கள், 2 பிப்ரவரி 2015 (09:45 IST)
ராஜஸ்தான் மாநில முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான,  அசோக் கெலாட் பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
 
ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இங்கு 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இந்நிலையில், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட் பன்றி காய்ச்சல் நோய் காரணமாக அவதிப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
 
இதுகு றித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- 
 
“பரிசோதனை செய்ததில் எனக்கு பன்றிக்காய்ச்சலுக்கு காரணமான எச்1என்1 வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர் சிகிச்சை காரணமாக உடல்நலம் தேறி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்