டெல்லியில் அப்துல் காலம் வாழ்ந்த வீட்டை நினைவிடமாக மாற்றக் கோரிக்கை

சனி, 29 ஆகஸ்ட் 2015 (01:48 IST)
முன்னாள் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் வாழ்ந்த டெல்லி இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

 
இது குறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு,  முன்னாள் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் ஏ.பி.ஜே.எம். மரைக்காயர் சார்பில் ஒரு கடிதம் அனுப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
 
ராமேஸ்வரத்தில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு மிகச் சிறப்பாக நடைபெற முழு ஆதரவு அளித்த பிரதர் நரேந்திர மோடிக்கும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
முன்னாள் குடியரசுத் தலைவர்  அப்துல் கலாம் தனது பதவிக் காலம் முடிந்த பிறகு டெல்லியில் ராஜாஜி மார்க் இல்லத்தில் வசித்து வந்தார்.  அந்த இல்லம் அவருக்கு மிகவும் விருப்பமான இல்லம் ஆகும். எனவே, அந்த இல்லத்தை அப்துல் கலாம் தேசிய அறிவுக் கண்டுபிடிப்பு மையம் என்ற பெயரில் நினைவிடமாக மாற்ற வேண்டும்.
 
அப்துல்  கலாம் சேகரித்து வைத்துள்ள நூல்கள், மற்ற பொருள்களை மாணவர்களும், இளைஞர்களும் பயன்படும் வகையில் செயல்படுத்த வேண்டும்.
 
மேலும், அப்துல் கலாம் பிறந்த நாளான அக்டோபர் 15ஆம் தேதி மற்றும் நினைவு நாளான ஜூலை 27ஆம் தேதி, ஆகிய இருதேதிகளில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள ராமேசுஸ்வரத்தில் அரசு மரியாதை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்