தாருமாறு விலை அதிரும் பெங்களூரு வாசிகள்: இட்லி ரூ.30, வடை ரூ.25

செவ்வாய், 13 அக்டோபர் 2015 (14:44 IST)
கர்நாடகாவில் கடந்த 3 மூன்று மாதங்களாக உயர்ந்து வரும் பருப்பு விலை உயர்வால் பெங்களூர் மற்றும் மைசூரில் உள்ள உணவகங்களில் இடலி, தோசை, வடை போன்ற உணவுகளின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளது.

கர்நாடகாவில் பருப்பு வகைகளின் வரத்து இலாததாலும், இந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய தானியங்களின் உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாக பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் கர்நாடக உணவகங்கள் இட்லி, தோசை, வடை போன்றவற்றை கணிசமாக உயர்தி உள்ளனர். 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட 2 இட்லி தற்போது அதிரடியாக 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தோசை விலை ரூ.50 ஆக உயர்ந்து விட்டது.

ரூபாய் 15 முதல் 20 வரை விற்கப்பட்ட வடை 25 ரூபாய் வரை பெங்களூரு மற்றும் மைசூர் பகுதிகளில் விற்கப்படுகிறது. சாலையோர கடைகள் வடை விற்பதையே நிறுத்திவிட்டன.

இந்த உணவு பொருட்களின் விலை உயர்வு கர்நாடக மாநில முழுவதும் உயர்ந்துள்ளது. உணவு பொருட்களின் விலையை இப்படி உயர்த்துவதை தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று உணவக அதிபர்கள் அறிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்