திருப்பதி அருகே செம்மரம் வெட்டியதாக 5 தமிழர்கள் கைது

ஞாயிறு, 21 ஜூன் 2015 (04:06 IST)
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி மூங்கில்பட்டு என்ற இடத்தில் செம்மரம் வெட்டியதாக கூறி 5 தமிழர்களை ஆந்திர சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
 

 
ஆந்திர மாநிலம் சந்திரகிரி அருகே மூங்கில்பட்டு என்னும் இடத்தில் 20 பேர் கொண்ட கும்பல் செம்மரங்களை வெட்டியதாக ஆந்திர சிறப்பு அதிரடிப்படைக்குத் தகவல் கிடைத்தது.
 
இதனையடுத்து, சிறப்பு அதிரடிப்படை டிஐஜி காந்தா ராவ் தலைமையில் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, செம்மரம் வெட்டிய கும்பல் காவலர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதில், சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் 5 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. இதனால், அவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
 
இந்நிலையில், செம்மரம் வெட்டியதாக கூறி, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 தமிழர்களை ஆந்திர சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்