தெலுங்கானா உட்பட 5 மாநில தேர்தல் தேதி.. இன்று அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்..!

திங்கள், 9 அக்டோபர் 2023 (08:14 IST)
தெலுங்கானா உள்பட ஐந்து மாநில தேர்தல் தேதி இன்று மதியம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.  ]

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலம் உள்பட ஒரு சில மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் தெலுங்கானா உட்பட ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இன்று அந்த தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இன்று பகல் 12.00 மணிக்கு தெலுங்கானா, மிசோரம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கிறது. இதனால் வரும் பாராளுமன்ற தேர்தலில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நடைமுறை அமல்படுத்தப்படாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

 ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் என்பது தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையிலான ஒரு மினி பாராளுமன்ற தேர்தல் ஆக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்