இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க் கப்பலில் தீ விபத்து: கடற்படை என்ஜினியர் உயிரிழப்பு

திங்கள், 7 மார்ச் 2016 (11:02 IST)
இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் ஐஎன்எஸ் விராட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கடற்படை தலைமை என்ஜினியர் உயிரிழந்தார்.


 

 
ஐஎன்எஸ் விராட் போர் கப்பல் கோவா கடற்பகுதியில் தனது பணிகளை மேற்கொண்டிருந்தது.
 
அப்போது, அந்த கப்பலின் பாய்லர் அறையில், நீராவி கசிசு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அதில் தீ விபத்து ஏற்பட்டது.
 
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர், அப்போது பாய்லர் அறையில் இருந்து வெளியே வந்த புகையினை சுவாசித்த 4 மாலுமிகள் மயங்கி விழுந்தனர்.
 
இதைத் தொடர்ந்து, வீரர்கள் கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர். பின்னர் பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவரான கடற்படை தலைமை மெக்கானிக்கல் என்ஜினியர் அசு சிங் கோவாவில் உள்ள கடற்படை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.


 

 
ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். மயக்கமடைந்த மற்ற மாலுமிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
சிகிச்சை பெறும் அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்