அவர் அவ்வப்போது கவர்ச்சியாக ஆடை அணிந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். இவர், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, கடந்த ஆகஸ்டு 7 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்கர்கள் இந்திய கூட்டமைப்பு மூலம் நடைபற்ற நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கும் போது அணிந்திருந்த ஆடை சர்ச்சைய ஏற்படுத்தியது.
ஏனெனில் அந்த ஆடையின் முன்னும் பின்னும், ஏடாகூடமான இடங்களில் மோடியின் படங்கள் இருக்கிறது. எனவே, ராக்கி சாவந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தின் கன்குரோலி காவல் நிலையத்தில், பிரஜித் திவார் என்ற வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.