ஒடிசா மாநிலம், கலஹந்தி மாவட்டம் மெல்கார் கிராமத்தைச் சேர்ந்த தனா மஜ்கி மருத்துவமனையில் இறந்த தனது மனைவியை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால், வாடகை வாகனத்தை ஏற்பாடு செய்யவும் வசதியில்லாததால் இறந்த தனது மனைவியின் உடலை தோளில் பத்து கிலோ மீட்டர் தூரம் சாலையில் சுமந்து சென்றார்.
இந்த சம்பவம் நாடும் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனா மஜ்கியின் அவலநிலை தொடர்பான தகவல் வெளியான பின்னர், கலஹந்தி மாவட்ட நிர்வாகம் இதுவரை, ஒரு மூட்டை அரிசியும், ரூ.30 ஆயிரமும் நிதியுதவி வழங்கியுள்ளது.