புதுடெல்லி, மயூர் விஹார் பகுதியில் இரு சிறுவர்கள் சேர்ந்து தாக்கியதில், 13 வயது சிறுவன் உயிரிழந்தான்.
இந்நிலையில், தனது நண்பர் இருவருடன் மோட்டார் சைக்கிளில் புதன்கிழமை மாலையில் அந்த பகுதியிலுள்ள பூங்கா ஒன்றுக்கு ரஜத் சென்றார். பின்னர், வீடு திரும்பவில்லை. இதனிடையே, அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் ரஜத் மேனன் சடலமாக கிடப்பது கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், பூங்காவுக்கு சென்ற ரஜத்திடம், சகோதரர்களான இரு சிறுவர்கள் மோதலில் ஈடுபட்டது தெரியவந்தது.
மோதலின்போது, ரஜத்தை இருவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். அதில், மயங்கி விழுந்த ரஜத்தை, இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு, மருத்துவர் பரிசோதித்தபோது, ரஜத் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்துள்ளது.