அவமானப்படுத்தியதால் பள்ளி மாணவன் தற்கொலை

வெள்ளி, 2 அக்டோபர் 2015 (15:44 IST)
ஆந்திராவின், தெலுங்கானாவில் ஆசிரியர்கள் அவமானப்படுத்தியதால் 15 வயது பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
தெலுங்கானாவின், கரீம்நகர் மாவட்டம் பெட்டாபள்ளி பகுதியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த அந்த சிறுவன், ஏழ்மையின் காரணமாக அந்த மாதத்திற்குரிய கல்விக் கட்டணத்தை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கட்ட முடியவில்லை.
 
ஆகையால், பள்ளி நிர்வாகம் செப்.30 ஆம் தேதி, மற்ற சில மாணவர்களேடு சேர்த்து, இந்த மாணவனையும் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்துள்ளனர்.   இந்த அவமானத்தால் மனமுடைந்த அந்த மாணவன், வீட்டிற்கு வந்ததும் சோகமாக இருந்துள்ளான். அதன் பின் விட்டிலிருந்து வெளியேறி விட்டான். ஒரு நாள் ஆகியும், தன் மகன் வீடு திரும்பாததால், மகனை காணவில்லை என்று காவல் நிலையத்தில் பூகார் அளித்தனர். 
 
போலிசார் நடத்திய விசாரணையில், அந்த மாணவன்,  தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து, அதற்கான காரணத்தை எழுதிவைத்து விட்டு, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததது.
 
இதையடுத்து சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்