இதற்கு முன்பாக பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்யும் போத, குடும்ப அட்டை முகவரிக்கான ஆவணமாக ஏற்றக்கொள்ளப்பட்டது. தற்போது, அந்த இணையதளத்தில் முகவரிக்கான சான்று ஆவணத்தில் இருந்து, குடும்ப அட்டை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் குடும்ப அட்டையின் நகலை அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆவணமாக இணைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அணைத்து பாஸ்போர்ட் அலுவலகங்களிலும் அமலுக்கு வரும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.