திருமணம் செய்ய தாய்மாமன் மகனை கடத்திய என்ஜினீயரிங் மாணவி

திங்கள், 17 அக்டோபர் 2016 (13:56 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் என்ஜினீயரிங் ஒருவர் காதலுடன் திருமணம் செய்ய தாய்மாமன் மகனை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டுள்ளார்.


 

 
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த புர்னிஷா(22) என்ற என்ஜினீயரிங் மாணவியும் அவரது காதலன் மயாங்மேத்தா என்பவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
 
திருமணத்துக்கு பிறகு வாழ பணம் தேவைப்படும், எப்படி பணம் திரட்டுவது என்று சிந்தித்து வந்தனர். அப்போது தொலைக்காட்சி நாட்கத்தில் குழந்தையை கடத்தி பணம் பறிப்பது போன்ற காட்சியை பார்த்துள்ளனர்.
 
அதன்படி புர்னிஷா தனது தாய்மாமன் குழந்தையை கடத்த முடிவு செய்தார். புர்னிஷா காதலுடன் சேர்ந்து குழந்தையை கடத்த பக்கவாக திட்டம் போட்டார். புர்னிஷா அவரது தாய்மாமன் வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல் சென்று, அந்த 4 வயது ஆண் குழந்தையிடம் நைசாக பேசி, வண்டியில் போகலாம் என்று கூறி வெளியே அழைத்து வந்துவிட்டார்.
 
திட்டத்தின்படி புர்னிஷாவின் காதலன் அவரது நண்பருடன் சேர்ந்து குழந்தையை கடத்தி சென்றனர். குழந்தையின் தந்தையான ரித்தேஷ்க்கு போன் செய்து, உங்கள் குழந்தையை நாங்கள் கடத்தி இருக்கிறோம், ரூ.50 லட்சம் பணம் வேண்டும். இல்லையென்றால் குழந்தையை கொன்று விடுவோம் என்று கூறியுள்ளனர்.
 
ரித்தேஷ் உடனே காவல்துறையினரிடம் புகார் செய்தார். இதையடுத்து காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். இரண்டாவதுமுறை போன் வந்ததை காவல்துறையினர் அதை பதிவு செய்தனர்.
 
அதைக்கொண்டு அவர்களை டிரேஸ் செய்து அவர்கள் பதுங்கி இருந்த இடத்தை கண்டுப்பிடித்தனர். குழந்தையை அவர்களிடம் இருந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அதோடு புர்னிஷா மற்றும் அவரது காதலனை கைது செய்தனர். பிர்னிஷா காதலின் நண்பன் தப்பி ஓடிவிட்டார்.
 
மேலும் குழந்தை கடத்தப்பட்ட 4 மணி நேரத்தில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்