சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், அந்நிறுவனத்தின் தலைவர் சுதிப்தோசென்னிடம் விசாரணை நடத்தியபோது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கு பணம் கொடுத்ததாக தெரிவித்தார்.
இது குறித்து விசாரிப்பதற்காக கொல்கத்தாவில் உள்ள அமலாக்க பிரிவு அலுவலகத்துக்கு நேரில் ஆஜராகும்படி, அமலாக்க பிரிவினர் நளினி சிதம்பரத்துக்கு கடந்த மாதம் சம்மன் அனுப்பினர். இதற்கு நளினி சிதம்பரம், கூறியதாவது, ”இந்திய கிரிமினல் நடைமுறை சட்டப்படி, பெண் ஒருவரிடம் விசாரிப்பதாக இருந்தால் அவரது வீட்டிற்கு வந்துதான் விசாரிக்க வேண்டும். அலுவலகத்துக்கு அழைத்து விசாரிக்க முடியாது.” என்றார்.
இந்நிலையில், இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் அமலாக்கப் பிரிவினர் ஆலோசனை நடத்தியதில், பணமோசடி தொடர்பான வழக்குகளில் பெண்களை அழைத்து விசாரிக்க தடை இல்லை என்று சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளார்கள். அதனால், அமலாக்கத் துறையினர், நளினிசிதம்பரத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்ப உள்ளார்கள்.