பிரிவு வாரியாக மெயின்டனர் பணிக்கு 1393 பணியிடங்களும், ஸ்டேசன் கண்ட்ரோல்/ டிரெயின் ஆபரேட்டர் பணிக்கு 662 பணியிடங்களும், கஸ்டமர் ரிலேசன்ஷிப் அசிஸ்டன்ட் பணிக்கு 1100 பணியிடங்களும், ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு 205 இடங்களும் உள்ளன. அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு 44 இடங்களும், அக்கவுண்ட் அசிஸ்டன்ட் பணிக்கு 24 இடங்களும் உள்ளன. பி.இ., பி.டெக் படித்தவர்கள், சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., எம்.பி.ஏ. படித்தவர் களுக்கு அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
என்ஜினீயரிங் பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ படித்தவர்களுக்கு ஜூனியர் என்ஜினீயர் மற்றும் டிரெயின் ஆபரேட்டர் போன்ற பணிகளில் வாய்ப்பு உள்ளது. 3 ஆண்டு, 4 ஆண்டு கால பட்டப்படிப்பை முடித்தவர்கள் கஸ்டமர் ரிலேசன் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ. படித்தவர்கள் மெயின்டெய்னர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.