அமெரிக்காவில் பின்லேடன் என்று கூறி இந்திய வம்சாவளி சீக்கியர் மீது தாக்குதல்

வியாழன், 10 செப்டம்பர் 2015 (09:54 IST)
அமெரிக்காவில் பின்லேடன் என்று கூறி இந்திய வம்சாவளி சீக்கியர்  மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்திய வம்சாவளி சீக்கியரான இந்திரஜித் சிங் முக்கர் அமெரிக்காவின் சிகாகோவில் வசித்து வருகிறார். கடந்த செவ்வாய்க் கிழமை மளிகை பொருட்கள் வாங்குவதற்காக காரில் சென்று சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது இந்திரஜித்தின் காரை வழிமறித்த ஒருவர், அவரின் காருக்குள் அத்துமீறி புகுந்து, "தீவிரவாதியே உன் நாட்டுக்கு திரும்பிச் செல்" என்று கூறி அவரை பலமாக தாக்கினார்.


 
 
இதனால் நிலைகுழைந்த இந்திரஜித் மயங்கி சரிந்தார். இருப்பினும் தாக்குதலை நிறுத்தாத அந்த நபர் இந்திரஜித்தின் முகத்தின் மீது பலமாக தாக்கியதில் அவரது தாடை எழும்புகள் முறிந்தன.
 
இதனைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திரஜித்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சீக்கியர் தாக்கப்பட்டது குறித்து வழக்கு பதிவு செய்த அமெரிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
"தீவிரவாதியே உன் நாட்டுக்கு திரும்பச் செல்" கூறி அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்