வெளிநாடுவாழ் இந்தியர்கள், இணையத்தளம் மூலம் வாக்களிக்க வாய்ப்பு

சனி, 23 ஆகஸ்ட் 2014 (15:30 IST)
வெளிநாடுவாழ் இந்தியர்கள், தபால் மூலமோ, இணையத்தளம் மூலமோ வாக்களிப்பது குறித்துப் பரிசீலனை செய்யக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் தெரிவித்துள்ளார்.
 
2014 ஆகஸ்டு 22 அன்று, புதுச்சேரியில் தென்மண்டலத் தலைமைத் தேர்தல் அலுவலர்கள் கலந்துகொண்ட பயிலரங்கில் உரையாற்றிய அவர், வெளிநாடுவாழ் இந்தியர்கள் இது குறித்து விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என்றார்.
 
ஒரு நபர் யாருக்கு வாக்களித்தார் என்பதை அறிய முடியாது. அதே நேரத்தில் ஒரு வாக்குச் சாவடியில் ஒட்டுமொத்தமாக யாருக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன என்பதை அறிந்துகொள்ள முடியும். இதனைத் தடுக்கும் வகையில் டேட்டா லைசர் என்ற முறையை நடைமுறைப்படுத்த, மத்திய சட்ட அமைச்சகத்துக்குத் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது என்று அவர் கூறினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்