பொதுவெளியில் பெண்களை விரட்டி விரட்டி முத்தமிட்டு வாலிபருக்கு சிக்கல்

திங்கள், 9 ஜனவரி 2017 (20:23 IST)
டெல்லியில் பொது இடத்தில் பெண்களை முத்தமிட்டு, அதனை வீடியோவாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாலிபர் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளனர்.


 

கடந்த சில தினங்களுக்கு முன் "கிரேஸி சப்மிட்" என்ற யூ ட்யூப் சேனலில் நிகழ்ச்சிகளை வழங்கும் சுமித் வர்மா என்பவர், சாலையில் நடந்து செல்லும் பெண்களுக்கு அருகில் சென்று முத்தமிட்டு பின்பு ஓடி விடுவது போன்ற வீடியோவை பதிவிட்டார்.

இதற்கு, இந்தியா முழுவதிலும் இருந்து பலத்த கண்டனங்கள் எழுந்தன. ஆனால், அந்த வீடியோவை பொழுதுபோக்கிற்காக மட்டுமே கருதி பதிவிட்டதாகவும், யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் பதிவிடவில்லை என்றும் சுமித் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் பதிவிட்ட வீடியோவை சுமித் நீக்கியுள்ளார். ஆனால், சுமித் வர்மாவின் இந்த விளக்கத்தை காவல் துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண்கள் எதிரான வன்கொடுமை அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் பெண்கள் மெட்ரோ ரெயிலில் கத்தி எடுத்துச் செல்ல அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்