மேற்குவங்க மாநிலத்தில் இளநிலை மருத்துவர்கள் கடந்த சனிக்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் நிலையில் 7வது நாளாகவும் போராட்டம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டம் செய்த சில மருத்துவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.