வாஷிங் மெஷின் வைப்பதில் தகராறு...பெண் அடித்துக் கொலை!

புதன், 7 டிசம்பர் 2022 (17:30 IST)
ஆந்திர மாநிலம் திருப்பதில் வாஷிங் மெஷின் வைத்த விவகாரத்தில் தந்தையும், மகனும்  சேர்ந்து ஒரு பெண்ணை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மா நிலம் ஸ்ரீசத்ய மாவட்டம் கதிரி   நகர் என்ற பகுதியில் வசித்து வருபவர் மனோகரன். இவர் மனைவி பத்மா பாய். இவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகில், பிரகாஷ்  நாயக் மற்றும் அவரது மகன் வசித்து வருகின்றனர்.

நேற்று காலையில், பிரகாஷ் வீட்டிற்கு அருகில் பத்மாபாய் தன் வாஷிங் மெஷினை வைத்துள்ளார்.

இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பிரகாஸ் மற்றும் அவரது மகன் இருவரும் சேர்ந்து பத்மாபாயை தாக்கினர். இதில், கீழே சரிந்து விழுந்த பத்மாபாயை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இதில், ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும்போது அவர் உயிர் பிரிந்தது. இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 Edited By Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்