ஆயோத்தியில் ஸ்பெஷல் பூஜை... ஊரடங்கை மீறினாரா யோகி ஆதித்யநாத்??

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (18:05 IST)
உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஊரடங்கின் போது கோலில் பூஜை ஒன்றில் கலந்துக்கொண்டதாக சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
 
இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வரும் என அறிவித்தார். அதன் படி இன்று முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அயோத்தியா ராமர் கோவில் சடங்கில் இவர் கலந்துக்கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இவருடன் 20 பேரும் பங்கேற்றதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இதனை மறுத்துள்ளார் யோகி ஆதித்யநாத். 
 
யோகி ஆதித்யநாத் தன்னை பற்றி பகிரப்படும் புகைப்படங்கள் சிவராத்திரி கொண்டாட்டத்தின் முதல் நாள் எடுக்கப்பட்டவை. அதேபோல ராமர் கோவில் குறித்து ஏப்ரல் மாதம் ஆலோசிக்கப்படுவதாக இருந்தது ஆனால், இப்போதைய சூழ்நிலையில் அது நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்