திருப்பதியில் கொரோனா வார்டாக மாறும் பக்தர்கள் தங்கும் விடுதிகள்!

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (08:24 IST)
திருப்பதியில் கொரோனா கட்டுப்பாட்டை தடுக்கும் விதமாக பக்தர்களின் தங்கும் விடுதிகளை தற்காலிக கொரோனா வார்டுகளாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகள் முழுக் கொள்ளளவை எட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்காலிக கொரோனா மருத்துவமனைகள் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து திருப்பதியில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் விடுதிகளான பத்மாவதி நிலையம், விஷ்ணு சீனிவாசம் ஆகியவற்றை தற்காலிக கொரோனா வார்டுகளாக மாற்றும் பணிகள் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்